சுமாடுகளை லாரிகளில் ஏற்றி வந்த தமிழக அதிகாரிகளை இந்துத்துவா குண்டர்கள் தாக்கிய சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் இருந்து இரு லாரிகளில் சுமார் 50 பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு தமிழகம் திரும்பியுள்ளனர் கால்நடைத்துறை அதிகாரிகள். அப்போதுதான், பர்மர் மாவட்டத்தின், தேசிய நெடுஞ்சாலை 15வது பகுதியில் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
லாரிகள் மீது கற்களை சரமாரியாக வீசியுள்ளது 50 பேர்கொண்ட கும்பல். இதில் ஒரு லாரி கடுமையாக சேதமடைந்தது. டிவைர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், பசுக்களை இறக்கிவிட்டுவிட்டு, லாரிக்கு தீ வைத்து கொளுத்த அந்த கும்பல் முயன்றுள்ளது. பசுக்களை இறைச்சிக்காக கடத்திச் செல்வதாக நினைத்து இந்துத்துவா, பசுபாதுகாவல் கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்காக நல்ல பசுக்களையும், கன்றுகளையும் வாங்கிச் செல்வதாக கூறியும், உள்ளூர் காவல்துறையிடம் பெற்ற 'என்.ஓ.சி' தடையில்லா சான்றிதழை காண்பித்தும் அந்த கும்பல் வெறி அடங்கவில்லை. இதனிடையே தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததால் லாரி எரிப்பிலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 7 போலீசார் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment