அதிமுகவின் எந்தப் பிரிவுக்கும் இரட்டை இலை கிடைக்காது என்ற தகவல் பரவியிருப்பதால் அதிமுகவின் இரு அணிகளும் அதிர்ச்சியில் உள்ளன.
அ.தி.மு.கவில் பிளவுபட்டுக் கிடக்கும் மூன்று அணிகளும் இணைய வேண்டும் என மன்னார்குடி குடும்ப உறவுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
'இரட்டை இலையை மீட்பது அவ்வளவு எளிதானதல்ல. பன்னீர்செல்வத்தை கட்சிப் பதவிக்குக் கொண்டு வர தினகரன் விரும்பவில்லை. தற்போதுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
பிரமாணப் பத்திரங்கள்
இரட்டை இலைக்கு உரிமை கோரி, அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மூன்று லட்சம் பிரமாண பத்திரங்களும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்தும் 3 லட்சம் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இடையில் புகுந்த தீபா
இந்த
விவகாரத்தில், யாரும் எதிர்பாராத வகையில், 52 ஆயிரம் மனுக்களைத் தாக்கல்
செய்தார் தீபா. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,
"அ.தி.மு.க என்ற கட்சிக்கு உரிமை கொண்டாடும் முயற்சியில் மூன்று அணிகளும்
இறங்கியுள்ளன. நிர்வாகிகளின் ஆதரவு கடிதங்களைப் பெறாமல், வருவோர் போவோரிடம்
எல்லாம் கையெழுத்து வாங்கி பிரமாண பத்திரமாகத் தாக்கல் செய்துள்ளனர்.
பயத்தில் இருக்கும் தீபா
ஒருவேளை அணிகள் இணைந்துவிட்டால், நம்மை யாரும் கழட்டிவிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தீபாவும் உரிமை கோருகிறார். இந்த பத்திரங்களைச் சரிபார்க்க நீண்டகாலம் ஆகும். 'சசிகலாதான் பொதுச் செயலாளர்' என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுக்கும் என தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒன்று நடப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
No comments:
Post a Comment