அதிமுக எம்எல்ஏ லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோ குறித்து சிபிஐ
விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம்
உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்துள்ளார்.
சசிகலா அணியை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக 122 அதிமுக எம்எல்ஏக்களை
கூவத்தூரில் அடைத்து வைத்தனர். பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை
எம்எல்ஏக்கள் கூவத்தூரில் கைதிகள் போல அடைபட்டு கிடந்தனர். எடப்பாடி
பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி ஏற்கனவே திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்
18ஆம் தேதி தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிரான
வழக்கை விரைந்து விசாரிக்க திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி அணிக்கு
ஆதரவளிக்க லஞ்ச பேரம் நடந்ததாக வெளியான தகவலையடுத்து மேற்கண்ட
இருவிவகாரங்களையும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குதிரை பேரம்
அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம், தங்கக்கட்டிகள் தர சசிகலா
அணி சார்பில் பேரம் பேசப்பட்டுள்ளது. இது தனியார் தொலைக்காட்சி நடத்திய
ஆபரேசனில் தெரியவந்துள்ளது. கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ சரவணன், யார்
யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தனர் என்று வாக்குமூலம் போல கொடுத்துள்ளார்.
பரபரப்பு செய்தி
ஊடகங்களில் இந்த தகவல் வெளியானது. விடிய விடிய இது பற்றியே விவாதித்தனர்.
லஞ்சம் கொடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள இந்த ஆட்சி நீடிக்கக்
கூடாது என்று திமுக செயல்தலைவரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின்
கூறியுள்ளார்.
ஹைகோர்ட்டில் முறையீடு
இதனிடையே எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரத்தை சிபிஐ அல்லது
வருவாய்துறையினர் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற
முதன்மை அமர்வில் முறையீடு செய்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு
ஜூலை 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கை
அவசர வழக்காக விசாரிக்க கோரினார். இதனையடுத்து உரிய ஆதாரங்களுடன் மனுவாக
தாக்கல் செய்தால், திமுகவின் முறையீடு குறித்து வரும் 16ஆம் தேதி
வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம்
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment