விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு சத்தியமங்கலத்தில் இன்று கைது செய்யப்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இலங்கைத் தமிழர் முகாம் உள்ளது. இங்குள்ள இலங்கைத் தமிழர்களை நேரில் சந்திக்க முகாமுக்கு வந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு.
ஆனால் அங்கிருந்த போலீசார் முகாமில் உள்ளவர்களை சந்திக்க யாருக்கும் அனுமதியில்லை என்று மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் வி.சி.கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் வி.சி.கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட வன்னியரசு உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மேலும் பெருமளவில் திரண்டதால் பவானிசாகர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

No comments:
Post a Comment