மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் தாய், மகள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று காலை பரோத்தி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி பராஸ்தே (26), அவரது மகள் சாரதா (9), பூனம் பார்மி (13), சுஷ்மா உலாதி (13) மற்றும் மார்கோ (14) ஆகியோர் ஆற்றில் குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்கள் மீது மின்னல் தாக்கியது. இந்த கோர சம்பவத்தில் ஐந்து பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாலாகட், சின்ஹின்வாரா, சியோனி, மாண்டியா, நரசிங்பூர், ரெய்சான் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment