Latest News

இதைக் கூடவா படிச்சிட்டு சொல்லணும்.. இறைச்சிக்கு தடை உத்தரவை படித்த பின் முடிவு.. பம்மிய முதல்வர்

 CM Palanisamy no comments on ban on cattle sale
மாடுகள் மற்றும் ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து முழுமையாக படித்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மாடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை வெட்ட மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதன் முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி, மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் உத்தரவை முழுமையாக படித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக அளவில் ஆடுமாடுகளை வெட்டுவதற்கு தடை சட்டம் ஒன்றை அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்தார். அதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அடுத்து வந்த தேர்தலில் பெரும் தோல்வி அடைந்து வீட்டில் முடங்கினார் ஜெயலலிதா என்பது வரலாறு. அதே கட்சியில் உள்ள முதல்வர் பழனிச்சாமிக்கு இதெல்லாம் நன்றாக தெரிந்தாலும் மத்திய அரசின் உத்தரவை படித்துவிட்டு சொல்கிறேன் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு பாஜகவின் பிடியில் தமிழக அரசு சிக்கியுள்ளது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.