இரட்டை இலை தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத்
டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் தினகரனுக்கு எதிராக திடீரென வாக்குமூலம்
கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கபப்ட்டுள்ளது. இதனை மீட்க
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் தினகரன் என்பது
வழக்கு.
திடீர் வாக்குமூலம்
இந்த வழக்கில் டிடிவி தினகரன், புரோக்கர் சுரேஷ், தினகரனின் கூட்டாளி மல்லி
ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த
வழக்கறிஞர் கோபிநாத் திடீரென வாக்குமூலம் அளித்துள்ளார். கோபிநாத்திடம்
டெல்லி போலீஸ் ஏற்கனவே விசாரணையும் நடத்தி இருந்தனர்.

நேரில் பார்த்த சாட்சி
அந்த வாக்குமூலத்தில் ஹவாலா ஏஜெண்டிடம் இருந்து சுகேஷ் பணம் பெற்றதை தாம்
நேரில் பார்த்தேன். பணத்தைப் பெற்றதும் சுகேஷ் சென்னையில் உள்ள நபருக்கு
போனில் பேசினார். இதற்கு நானே சாட்சி என கூறியுள்ளார்.
தினகரனுக்கு சிக்கல்
சென்னை வழக்கறிஞரின் வாக்குமூலத்தால் தினகரனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
தினகரனின் நீதிமன்ற காவல் வரும் 15-ந் தேதி முடிவடைய நிலையில் அவருக்கு
ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது டெல்லி போலீஸ்.
திஹார் வாசம் தொடரும்
தற்போது கோபிநாத்தின் வாக்குமூலத்தால் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காமல்
போகும் நிலை உருவாகி உள்ளது. தினகரன், சுகேஷ், மல்லி மூவரும் தொடர்ந்து
திஹார் சிறையிலேயே இருக்க நேரிடும் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment