Latest News

அது அவரோட இஷ்டம்.. ரஜினி குறித்து ஸ்டாலின் கருத்து

 Stalin comments on Rajini speech in fans meet
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் குறித்த சலசலப்பை கிளப்பி விட்டுள்ளார். அவர் நடித்துள்ள 2 ஓ படம் விரைவில் வெளியாகத் தயாராகி வரும் நிலையில் மீண்டும் சூட்டைக் கிளப்பியுள்ளார் ரஜினி.

அவரது பேச்சு குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இன்று மாலை கொளத்தூரில் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின் கூறுகையில், ரஜினியை அரசியலுக்கு வருமாறு பலமுறை நாங்களே அழைத்துள்ளோம். ஆனால் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பமாகும். ரஜினி பேச்சு குறித்து தனிப்பட்ட முறையில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் அதை நாங்கள் வரவேற்போம் என்று கூறினார் ஸ்டாலின்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.