Latest News

ஜெ.வின் பெருங்கோபத்தில் இருந்த ரஜினியை தாங்கி பிடித்தது திமுக முதலைகள்தான்!

1990களில் ஜெயலலிதாவின் உக்கிரமான பெருங்கோபத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்தை தாங்கி பிடித்ததே இன்று அவர் விமர்சிக்கும் 'திமுக முதலைகள்தான்' என்பதை மறந்துவிட்டதாகவே தெரிகிறது. 1980களின் தொடக்கத்தில் ஆர்.எம். வீரப்பனுடன் நட்பு.. நெருக்கம்... இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? என ஊடகங்கள் பற்ற வைத்தன. அன்று வைக்கப்பட்ட தீ இந்த 'நூற்றாண்டிலும்' தொடருகிறது என்பதுதான் சோகம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பற்றி படுபயங்கரமான குழப்பத்தை உருவாக்கி வருகிறவர் ரஜினி. குறிப்பாக ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போது அவர் காட்டும் பிலிம் ரோல்கள் அனைத்தும் 'அந்துபோச்சு' ரகம்தான்.

பாட்ஷா ரஜினி 1990களில் ஜெயலலிதாவின் ஆட்சியை எதிர்த்து பேசினார் 'பாட்ஷா' ரஜினிகாந்த். இதனால் ரஜினி மீது கடும் கோபத்தில் இருந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.
அன்று தாங்கிய திமுக
அன்று தாங்கிய திமுக ஆனால் ரஜினிக்கு அன்று பாதுகாப்பாக நின்று குரல் கொடுத்தது திமுக. இதனால்தான் மூப்பனார் தமாகாவை தொடங்கி திமுகவுடன் கூட்டணி வைத்தபோது 'அதற்கு வாய்ஸ்' கொடுத்தார் ரஜினிகாந்த். அன்றைய மக்களின் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. அதனால் அது ஒர்க் அவுட் ஆனது.

வாய்ஸ் எடுபடலையே அதற்குப் பின்னர் ரஜினிகாந்தும் பலமுறை வாய்ஸ் கொடுத்து பார்த்தார்... தமிழக மக்கள்தான் காது கொடுக்கு கேட்கவே தயாராக இல்லை. தற்போது தமிழக அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
பாஜகவின் வாய்ஸ் ரஜினி
பாஜகவின் வாய்ஸ் ரஜினி இந்த குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அலையாய் அலைகிறது டெல்லி. இதற்காகவே களமிறக்கப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த் நாடறிந்த பேருண்மை. இந்த விசுவாசத்துக்காகவே அன்று தம்மை தாங்கிய திமுகவை 'முதலைகள்' என டெல்லி எஜமானர்களின் ஸ்கிரிப்படி பேசியிருக்கிறார் ரஜினிகாந்த் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.