Latest News

திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாளை சென்னை வர திடீர் உத்தரவு !

Stalin call of his party MLA's to reach Chennai tomorrow 
திமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் நாளை சென்னை வர வேண்டும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது. இதனிடையே சட்டசபையை உடனடியாக கூட்டுமாறு முதல்வர் மற்றும் பேரவை தலைவருக்கு உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியிருந்தார்.

அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்க சட்டசபை உடடினயாக கூட்டப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே நாளை காலை 10 மணிக்கு சென்னையில் இருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை காலை கட்சி தலைமையகத்தில் எம்எல்ஏகளுடன் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சட்டசபையை கூட்ட தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.