தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் அ.தி.மு.க அம்மாஅணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், " அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழி நடத்தி செல்ல பெரும் பங்காற்றியவர் சசிகலா. ஆனால் கட்சியிலோ, ஆட்சியிலோ அவர் ஆர்வம் காட்டவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அரசியலுக்கு வர வாசல் அமைத்து கொடுத்தவர் சசிகலா.
ஆனால் அ.தி.மு.க.வையும் சசிகலாவையும் அழிக்க பார்க்கிறார் ஓ.பி.எஸ். அ.தி.மு.க தொண்டர்களுக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்திகிறார். ஜெயலலிதா இறந்த பிறகு பல மூத்த நிர்வாகிகள் இணைந்து சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் திடீரென பாஜகவிடம் அடிபணிந்து சசிகலாவை எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.வில் குழப்பதை ஏற்படுத்த நினைப்பதை விட பாஜகவில் இணைவது ஓ.பி.எஸ்க்கு நல்லது. மோடி தலைமையிலான மத்திய அரசு மாட்டிறைச்சிக்கான தடையை திரும்ப பெறவேண்டும். இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த ஒரு வழக்கிலும் லஞ்சம் வாங்கியவர்களைதான் போலீசார் கைது செய்வார்கள். ஆனால் டெல்லி போலீசார் முதன் முறையாக லஞ்சம் கொடுத்ததாக தினகரனை கைது செய்து இருக்கிறார்கள். இது திட்டமிட்ட சதி அவருக்கு ஜாமீன் வழங்காமல் வழக்கு விசாரணையையும் இழுத்தடிக்கிறார்கள். கட்சியை ஜெயலலிதா வழியில் நடத்த தகுதி படைத்தவர்கள் சசிகலாவும், தினகரனும் தான்." என்று கூறினார்.

No comments:
Post a Comment