ரியோ டிஜெனிரோ: பிரேசிலில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்த சில மணிநேரங்களிளேயே அதனை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தில் பிரேசில் நாட்டில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. அதில் பச்சிளம் குழந்தை ஒன்று செவிலியரின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் அதிசய காட்சிகள் ஒளிபரப்பாகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரேசிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து 10 மாதங்களுக்குப் பிறகு தான் கையை பிடித்துக்கொண்டு நடக்க முயற்சிக்கும். ஆனால் இந்தக் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே நடக்கத் தொடங்கிவிட்டது.
நர்ஸ் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை தத்தி தத்தி நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. அதனை பார்ப்பவர்கள் அடுத்த உசைன் போல்ட் ரெடி என கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment