கோடநாடு எஸ்டேட் மிரட்டி வாங்கப்பட்டதாக எஸ்டேட்டை விற்பனை செய்த பிரிட்டன் நாட்டுக்காரர் குற்றம்சாட்டியுள்ளார். பிரிட்டனை சேர்ந்தவர் பீட்டர் கிரேக் ஜோன்ஸ். இவர்தான் கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளராகும். தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் இன்று இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "எஸ்டேட்டை விற்க வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் எனது குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்தார். ஏராளமான இடையூறுகள் மற்றும் நிர்பந்தங்களை சந்தித்ததை தொடர்ந்து, சசிகலாவிற்காக அவரது சகாவான உடையாருக்கு எஸ்டேட்டை விற்பனை செய்தேன். அதன் அப்போதைய சந்தை மதிப்பு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடியாக இருந்தது. ஆனால் ரூ.7.60 கோடிக்கு அதனை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது". இவ்வாறு அவர் கூறிய காட்சிகள் டிவி சேனலில் காண்பிக்கப்பட்டது.

No comments:
Post a Comment