மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்து பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. கேரளா, கர்நாடகா, மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
துவும் ரம்ஜான் நோன்பு தொடங்கும் நிலையில் இத்தடை விதிப்பானது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதனைக் கண்டித்து மாட்டுக் கறி திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி கூறுகையில், மாட்டிறைச்சியில் தேவையற்ற கொழுப்பு உள்ளது; அதனால் அதை தவிர்க்க வேண்டும். மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை பிறப்பித்து உத்தரவிட்டதை வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

No comments:
Post a Comment