Latest News

மோடியின் திட்டத்திற்கு ஓகே சொன்னது மத்திய பிரதேசம்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது.?

 மத்திய பிரதேசம்
கடந்த மாதம் நிட்டி அயோக் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் நிதியாண்டு காலத்தை ஏப்ரல்-மார்ச் காலத்தில் இருந்து ஜனவரி-டிசம்பர் காலத்திற்கு மாற்ற வேண்டும் எனப் புதிய திட்டத்தை அறிவித்தார். 150 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் இந்த நடைமுறையை மாற்றுவது மிகவும் கடினம், நிறுவனங்கள் முதல் மக்கள் வரை அனைத்துத் தரப்புகள் மத்தியிலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் எனக் கருத்து நிலவி வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மத்திய பிரதேச மாநிலம் தனது நிதியாண்டு காலத்தை மாற்றிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ஒரு கண்டிஷன்.?!

மத்திய பிரதேசம் நிதியாண்டு காலத்தை மாற்றுவது சாதாரணக் காரியமில்லை, இதில் பல சிக்கல்கள் நிறைந்துள்ளது. அதிகளவிலான வர்த்தகத்தைக் கொண்டுள்ள மாநிலங்களான மாகராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய பிரதேசம் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
கண்டிஷன்
கண்டிஷன் மத்திய பிரதேசம் மோடியின் நிதியாண்டு மாற்றும் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டாலும், அதனை உடனடியாக அமலுக்குக் கொண்டு வர முடியாது. சில காலம் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளது.
என்ன லாபம்?
என்ன லாபம்? இந்த நிதியாண்டு மாற்றத்தின் மூலம் பொருளாதார மற்றும் அரசியல் மேலாண்மையில் சிறப்பான வளர்ச்சி அடைய முடியும். அதுமட்டும் அல்லாமல், உலகப் பொருளாதாரச் சந்தையுடன் இந்தியா பொருளாதாரமும் ஒன்று சேர்ந்து இயங்க முடியும்.
ஷங்கர் ஆச்சாரியா
ஷங்கர் ஆச்சாரியா ஜனவரி - டிசம்பர் நிதியாண்டு மாற்றத்தை மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகரான ஷங்கர் ஆச்சாரியா தலைமையிலான குழு கடந்த நிதியாண்டில் சமர்ப்பித்தது. தற்போது இந்த முடிவை மத்திய அரசு அமலாக்கம் செய்யத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது.
பட்ஜெட்
பட்ஜெட் பொதுறை நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதி அளிக்கக் காலதாமதம் ஆகும் நிலையில் ஒரு காலாண்டு முழுமையாக வர்த்தகம் பாதிப்பு அடைகிறது. இதனைக் களைய பிப்ரவர் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது.
நிதியாண்டு மாற்றம்
நிதியாண்டு மாற்றம் தற்போது நிதியாண்டின் துவக்கம் ஜனவரி 1ஆம் தேதி மாற்றப்பட்டால் பட்ஜெட் அறிவிப்புக் குறைந்தபட்சம் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரையிலான காலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லையெனில் நிதியாண்டு மாற்றமும் சரி, பட்ஜெட் தாக்கலும் மாற்றமும் சரி எவ்விதமான பயனும் இல்லை. இதனைக் கண்டிப்பாசிவராஜ் சிங் சவ்ஹான்க மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

சிவராஜ் சிங் சவ்ஹான் உலகப் பொருளாதாரத்துடன் ஒத்து இந்தியா இயங்க வேண்டும் என்று மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை சரியானது என மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்தார்.
150 ஆண்டு வழக்கம்
150 ஆண்டு வழக்கம் இந்தியா பிரிட்டிஷ் அரசு ஆட்சியில் இருக்கும்போது நிதியாண்டாக ஏப்ரல்-மார்ச் மாத காலகட்டத்தை 1867ஆம் ஆண்டு அமலாக்கம் செய்தது. 150 ஆண்டுகளாக இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் இதனைப் பயன்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு
தமிழ்நாடு மத்திய அரசின் மிகப்பெரிய வரி சீர்திருத்த திட்டமான ஜிஎஸ்டி-க்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், பல கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புதல்களுடன் கடைசியில் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது நிதியாண்டு மாற்றத்திற்கு எனச் செய்யப் போகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.