கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில்
தொடர்புடையதாக கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனராஜின்
மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடாநாடு எஸ்டேட் பங்களாவின்
காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இன்னொரு காவலாளி
கிருஷ்ண பகதூர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கபப்ட்டுள்ளார்.
இந்தக் கொலை வழக்கை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக
விசாரித்து வந்தனர். அதில், கேரளாவில் பதுங்கியிருந்த 6 பேரை போலீசார் கைது
செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், ஜெயலலிதாவின் முன்னாள்
கார் ஓட்டுநர் கனகராஜுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
ஆனால், கனகராஜ் ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்துவிட்டதாக
சேலம் போலீசார் கூறுகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி அருகே உள்ள சித்திரப்பாளையத்தில் உள்ள கனகராஜ்
வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனகராஜ் மனைவி கலைவாணி
மற்றும் சகோதரர் தனபால் உள்ளிட்டோரிடம் நீலகிரி மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா
விசாரணை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment