ஓ.பன்னீர் செல்வம் உருவாக்கி வைத்துள்ள அதிகாரிகள் மட்டத்திலான லாபியை
படிப்படியாக உடைத்து தன் பக்கம் இழுக்கம் முயற்சிகளில் முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி இறங்கியுள்ளாராம். இதனால் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று
சந்தேகம் வேகமாகப் பரவி வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, இரண்டு அணிகளும் பேச்சுவார்த்தை என்ற
பெயரில் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். நேற்று நடந்த மே தின பொதுக்
கூட்டத்தில் கூட கோபாவேசம் காட்டினார் ஓ.பி.எஸ்.
"எடப்பாடியும் தினகரனும் கூட்டாளிகள். மக்கள் எண்ணத்தை நிறைவேற்றுவதாகக்
கூறி கபட நாடகம் ஆடுகின்றனர்" எனக் கொந்தளித்தார் பன்னீர்செல்வம்.
மறுபக்கம் தன் பங்குக்கு தானும் ஆவேசம் காட்டியுள்ளார் எடப்பாடி
பழனிச்சாமி.
கட்சியே நம்ம பாக்கெட்டில்தான்
சேலம் கூட்டத்தில் அவர் பேசுகையில், இரண்டு அணிகளும் இணைவதில் எந்த
நிபந்தனையும் தேவையில்லை. ஒட்டுமொத்த கட்சியே நம்முடைய கட்டுப்பாட்டில்தான்
இருக்கிறது. எதற்காக முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும்? எனக் கேள்வி
எழுப்புகின்றனர் எடப்பாடி அணியினர்.
முதல்வர் பதவியைத் தர முடியாது
ஓ.பி.எஸ். தரப்பில் கூறுகையில், பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா தயவால்
இரண்டு முறை முதல்வர் பதவி தேடி வந்தது. மூன்றாவது முறை, மோடியின் தயவால்
கிடைத்தது. அந்தப் பதவியை விட்டுத் தராமல் விடாப்பிடியாக சசிகலாவை அவர்
எதிர்த்திருந்தால், முதல்வர் பதவியை யாரும் தட்டிப் பறித்திருக்க முடியாது.
நாம் வலுவாகத்தான் இருக்கிறோம்
இப்போது நாம் வலுவாக இருக்கிறோம். இந்த நேரத்தில் முதல்வர் பதவியை விட்டுத்
தர வேண்டும் எனக் கேட்பதில் நியாயமே இல்லை என்பதுதான் எடப்பாடி
ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது. "கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு
மிஞ்சிய சக்தியை வளரவிட்டால், வரும் காலங்களில் அ.தி.மு.க கையைவிட்டு
நழுவிப் போய்விடும் என நினைக்கிறார் எடப்பாடி.
நிரந்தர முதல்வர் கனவில்!
சேகர் ரெட்டியைக் கையில் வைத்துக் கொண்டே பன்னீர்செல்வத்தை வளைத்தார் மோடி.
விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டால், எடப்பாடி வளைக்கப்பட்டார்.
அன்புநாதன் விவகாரத்தால் வழிக்கு வந்தார் நத்தம். சீனியர்களை வளைப்பதற்கு
விதம் விதமான வித்தைகளைப் பயன்படுத்தியது பா.ஜ.க. அந்த வித்தைகளின் வழியாக,
'நிரந்தர பொதுச் செயலாளர் பிளஸ் நிரந்தர முதல்வர்' கனவில் ஊறித்
திளைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் அ.தி.மு.கவினர்.
No comments:
Post a Comment