சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம்
கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள பிரம்மபுத்ரா மாணவர் விடுதியின் பின்புறம் உள்ள
முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ
இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண்ணின் உடலைக்கைப்பற்றி மருத்துவமனைக்கு
பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பாதுகாப்பு நிறைந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் இந்த மர்ம மரணம்
நிகழ்ந்திருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. இருப்பினும் அந்த பெண் யார் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
காவல்துறையினர்
24 மணிநேரமும் ரோந்து சென்று வரும் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்த
நிலையில் மீட்கப்பட்டுள்ளது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளாது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை
நடத்திவருகின்றனர்.
No comments:
Post a Comment