தமிழகத்தில் எப்படியும் காலூன்றிவிடுவது என கங்கணம் கட்டிக்
கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி அதிரடியாக முதல்வர் வேட்பாளர்களாக ஓ.
பன்னீர்செல்வம். ரஜினிகாந்த் அல்லது நிர்மலா சீதாராமனை ஆகியோரில் ஒருவரை
முன்னிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன.
தமிழகத்தில் மட்டுமே பாஜகவால் நுழைய முடியாத நிலை உள்ளது. அதிமுக,
திமுகவின் பலமான வாக்கு வங்கியால் பாஜகவால் தமிழகத்தில் காலூன்றுவது என்பது
கானல் நீராகவே இருந்து வருகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக மூலமாக காலூன்றுவதற்கு பாஜக தொடர்ந்து
முயற்சித்து வருகிறது. தற்போது அதிமுக இரண்டாக பிளவுபட்டு அதன் வெற்றி
சின்னமான இரட்டை இலையும் முடங்கி போயுள்ளது.
முதல்வர் வேட்பாளர்
அதிமுக பலவீனமாகிவிட்ட நிலையில் இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும்
முயற்சியில் பாஜக மும்முரமாக உள்ளது. தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் என
ஒருவரை அறிவித்து அரசியல் சடுகுடு ஆட்டத்தை தொடங்கலாம் என்பது பாஜகவின்
கணக்கு.

நிர்மலா சீதாராமன்
பாஜக முதலில் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை
களமிறக்க நினைத்தது. இதனால்தான் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை
முடிவுக்குக் கொண்டு டெல்லியால் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அனுப்பி
வைக்கப்பட்டார்.

ரஜினிகாந்த்
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை இழுக்கும் வேலைகளையும் பாஜக
மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. ரஜினிகாந்தை ஜனாதிபதி வேட்பாளராகவும்
அறிவிக்க பாஜக தயாராக இருக்கிறது... ஆகையால் அவர் பாஜகவில் சேர வேண்டும் என
டெல்லியில் இருந்து சிக்னல் கொடுக்கப்பட்டது. இருப்பினும் ரஜினிகாந்த்
தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஓபிஎஸ்
இந்த நிலையில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக அள்ளுவதற்கு முன்னாள் முதல்வர்
ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக கோஷ்டியை அப்படியே பாஜகவில் சேர்க்க
வைப்பது; பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்துவது
என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஓபிஎஸ் கோஷ்டியைப்
பொறுத்தவரையில் சேகர் ரெட்டி விவகாரத்தில் டெல்லியிடம் வசமாக
சிக்கியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி கனவு
இதனால் டெல்லி என்ன சொல்கிறதோ அதையே செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறது
ஓபிஎஸ் கோஷ்டி. பாஜகவில் ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டி இணையும் நிலையில்
தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று என்கிற நிலையை உருவாக்கிவிட முடியும்
என்பதுதான் பாஜகவின் திட்டம்... தமிழகத்தில் குறைந்தபட்சம்
எதிர்க்கட்சியாகவாவது உருவெடுத்துவிடலாம் என நினைக்கிறதாம் பாஜக.
No comments:
Post a Comment