Latest News

இன்னும் 50 வருஷத்துக்கு அதிமுக ஆட்சிதானாம்.. சொல்கிறார் செங்ஸ்!

 ADMK will rule the state for next 50 years, says KAS
இன்னும் 50 வருடங்களுக்கு அதிமுக ஆட்சிதான் என்று கூறி ஒட்டுமொத்த தமிழகத்தையம் அதிர வைத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். சிரிக்காமல் ஜோக் அடிப்பது எப்படி என்று அதிமுகவினரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த 50 வருடத்துக்கு அதிமுகதான் தமிழகத்தை ஆளும் என்று கூறி அதிர வைத்திருக்கிறார் செங்கோட்டையன்.

கோவில்பட்டியில் செயற்கை இழை ஹாக்கி மைதானம் அருகே விளையாட்டு விடுதி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதிலிருந்து: தேர்தல் வரப்போகிறதாக சிலர் பேசுகின்றனர். இந்த 5 ஆண்டுகள் மட்டுமல்ல, இனி 50 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி தான் நிலைக்கப் போகிறது. இந்த அரசு தங்குதடையேதுமின்றி வீரநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வீரர்கள் எப்படி விளையாட்டில் முதலிடத்தை நோக்கிச் செல்கின்றார்களோ, அதுபோல நாங்களும் முதலிடத்தில் தான் உள்ளோம். அதிமுகஅரசு, மக்கள் அரசாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்றார் செங்கோட்டையன். எனவே மகா ஜனங்களே, இன்னும் 4 வருடத்துக்கு மட்டுமல்ல, அதையும் தாண்டி அடுத்த 46 வருடங்களும் கூட அதிமுக ஆட்சிதான் நடக்கப் போகுது.. போய் வேலையைப் பாருங்க போங்க!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.