எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் நடுவேயான
பேச்சுவார்த்தையில், அமைச்சர் ஜெயக்குமாரும், லோக்சபா துணை சபாநாயகர்
தம்பிதுரையும் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
சில தினங்கள் முன்பே இக்குழு கூடும் நிலை ஏற்பட்டபோது, ஜெயக்குமார்
திடீரென, ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்து பேட்டியளித்தார். தர்ம
யுத்தத்தில் முதல் கட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாக ஓ.பி.எஸ் கூறியதை
ஜெயக்குமார் கிண்டல் செய்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு கூட
பன்னீர்செல்வம்தான் காரணம் என கூறிக்கொள்வார் என கேலி செய்திருந்தார் அவர்.
எடப்பாடி தரப்பு கடுப்பு
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளரான ஜெயக்குமாரும், தம்பிதுரையும்தான்,
பேச்சுவார்த்தையை கெடுத்துவிட தேவைப்பபடும் ஏற்பாடுகளை செய்துவருவதாக
எடப்பாடி தரப்பு கடும் கடுப்பில் உள்ளதாம்.
பதவியில் ஆசை இல்லை
எங்களுக்கு பதவியில் ஆசையில்லை என்பதையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மக்களிடம்
சொல்ல விரும்புகிறது. எனவேதான் சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு விலக்க
வேண்டும், ஜெ. மரணத்திற்கு சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி கூறி வருகிறார் கே.பி.முனுசாமி.
சீண்டும் ஜெயக்குமார்
ஆனால் ஓ.பி.எஸ் தரப்பு பதவிக்கு ஆசைப்பட்டுதான் பேச்சு நடத்த வருகிறது
என்று கூறவே ஜெயக்குமார் மற்றும் தம்பிதுரை விரும்புகிறார்கள். இதனால்தான்
எடப்பாடிதான் முதல்வராக தொடருவார் என தம்பிதுரை பேட்டியில் கூறினார்.
ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டியில், இரு அணியும் இணைய ஓ.பி.எஸ்-க்கு
நிதித்துறையை வழங்க தயார் என கூறினார்.
முத்தரப்பும் 3 கொள்கை
மக்கள் மத்தியியில் பன்னீர் அணி, பதவிக்கு அலைவதை போல காட்ட வேண்டும் என
விரும்புகிறது டிடிவி தினகரன் ஆதரவு கோஷ்டி. இதை தடுக்க முடியாமல்
சிக்கிக்கொண்டுள்ளது எடப்பாடி கோஷ்டி. இதனால் கோபத்திலுள்ளது ஓ.பி.எஸ்
கோஷ்டி. இதுதான் அதிமுக சிக்கலுக்கு காரணம்.
No comments:
Post a Comment