எங்கள் கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளிக்கட்டும்,
நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று அய்யாகண்ணு தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம்
அமைத்தல், விவசாய பொருள்களுக்கு நல்ல விலை உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இன்று 41-ஆவது நாளாக போராட்டம் எட்டியுள்ளது. இந்நிலையில் நிதி ஆயோக்
கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
அய்யாகண்ணு தலைமையில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் அய்யாகண்ணு தெரிவிக்கையில், பிரதமரை சந்திக்க
ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார். அனைத்து கட்சி தலைவர்களும்
போராட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி
வருகிறது.
தேசிய வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மழை
பொய்த்துவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் எங்களுக்கு
உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என அய்யாகண்ணு தெரிவித்தார்.
No comments:
Post a Comment