சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகளை கழுத்தை
அறுத்துக் கொலை செய்துவிட்டு பணம் மற்றும் நகைகள்கொள்ளையடிக்கப்பட்ட
சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் மகாலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்தக் குடியிருப்பில் ஹேமலதா தனது மகள் ஜெயலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டம் விட்ட கொள்ளை
கும்பல் ஒன்று ஹேமலதா வீட்டிற்கு சென்றது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள்
ஹேமலதா, ஜெயலட்சுமி ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில்
இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று
இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் முதல்
கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த
தாய், மகள் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment