சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை
திடீர் சோதனையில் இறங்கியுள்ளது. இன்று அதிகாலை தொடங்கிய சோதனை
விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில்
உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர்
திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும்,
நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித்
துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட
இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர், ஆர்.கே. நகர்
தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பணப்பட்டுவாடா புகார்
டிடிவி தினகரன் கட்சியினர் மீது கடுமையாக எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் வீடு
அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் வரி
ஏய்ப்பில் விஜயபாஸ்கர் ஈடுபட்டதாகக் வருமானவரித் துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
வருமானவரித் துறை சோதனைக்கு பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம்,
நகைகளின் மதிப்பு தெரிவரும்.
No comments:
Post a Comment