தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான
உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மைச் செயலாளராக பனீந்தர் ரெட்டி நியமனம்
செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
முதன்மைச் செயலாளராக ஹர்மந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதன்மைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் கூடுதலாக சிறப்புதிட்ட
செயலாக்கத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவர் தொடர்ந்த
வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை பனீந்தர ரெட்டி கட்டவில்லை என்பதால்
மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment