தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
மாற்றப்பட்டு புதிய தலைவரான வானதி சீனிவாசன் நியமிக்கப்பட கூடும் என
தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மாற்றியாக வேண்டும் என அக்கட்சி
மேலிடம் தீவிரமாக இருக்கிறதாம். வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாஜகவை
காலூன்ற வைக்கும் வியூகங்களுடன் புதிய தலைவரை நியமிக்கும் முடிவில்
இருக்கிறதாம் டெல்லி.
தமிழிசையை மாற்றிவிட்டு வானதி சீனிவாசனை நியமிக்கவும்
வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சர்ச்சைக்குரிய நபரான
கருப்பு முருகானந்தத்தை அதிரடியாக பாஜக தலைவராக்கினாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
யோகி ஆதித்யநாத்தைப் போல அராஜகமான, அநாகரிகமாக பேசக் கூடிய ஒருநபரை தமிழக
பாஜக தலைவராக நியமிக்கும் யோசனையில் இருக்கிறதாம் டெல்லி. ஏற்கனவே
சுப்பிரமணியன் சுவாமி ஒட்டுமொத்த தமிழக பாஜகவையே கலைத்துவிட்டு தம்மை
தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment