பாம்பன் தீவு மற்றும் மன்னார் தீவுகளுக்கு இடையே இருக்கும்
ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது
குறித்து இந்திய தொல்வியல் துறை மற்றும் இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில்
ஆகியவை ஆய்வு நடத்த இருக்கின்றன.
இந்த ஆய்வு அனேகமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் இருக்கலாம் எனத் தெரிகிறது.
“ராமர் சேது சோதனைத்திட்டம்” என்ற பெயரில் 15 முதல் 20
ஆய்வாளர்களுக்கு, 2 வார பயிற்சியை கடல்சார் தொல்லியல் ஆய்வாளர்கள் அளிக்க
இருக்கிறார்கள்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும்
முக்கிய ஆராய்ச்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் அனைத்து
பணிகளையும் மேற்கொள்ள உள்ளது. எந்த அமைச்சகமும் இதில் ஈடுபடவில்லை.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்(B.C)4ம் நூற்றாண்டு முதல் முதலாவது நூற்றாண்டு வரை, துணைக்கண்டத்தில் உள்ள மக்களின் நாகரீகம் குறித்து புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வு முக்கிய தொடக்கமாக அமையும்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்(B.C)4ம் நூற்றாண்டு முதல் முதலாவது நூற்றாண்டு வரை, துணைக்கண்டத்தில் உள்ள மக்களின் நாகரீகம் குறித்து புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வு முக்கிய தொடக்கமாக அமையும்.

இந்த ஆய்வில் இருந்து கிடைக்கும் முடிவுகளைப் பொருத்து,
அடுத்த கட்டமாக, குஜராத்தில் உள்ள துவராகவில் இதேபோல, அகல்வாராய்வுகள்
மேற்கொள்ள இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இந்திய வரலாற்று கவுன்சிலின் தலைவர் ஓய். சுதர்சன் ராவ் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
ராமர் சேது பாலம் இயற்கையாக உருவானதா? அல்லது மனதனால்
கட்டப்பட்டதா? என்ற பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. ஆதலால், அது
குறித்து “ரிமோட் சென்சிங்” எனப்படும் செயற்கைக்கோள் உதவியுடன் ஆய்வு
மேற்கொள்ளப்பட உள்ளது.
மன்னார் தீவு மற்றும் ராமேஸ்வரம் தீவுக்கு இடையே தென் கிழக்காக உள்ள கடற்கரை��.
No comments:
Post a Comment