நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார்
நிறுவனத்துடன் மத்திய அரசு நாளை கையெழுத்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல
பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி.
சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான ஜெம் லாபரெட்டரீஸுக்கு மத்திய அரசு
அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை
ஆகிய இடங்களில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
மக்கள் விரும்பாதவரை...
இப்போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். மக்கள்
விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என
உறுதிமொழி அளித்தது பாஜக. மத்திய அமைச்சரிடம் நெடுவாசல் போராட்ட குழு
நேரிலேயே சென்றும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளை கையெழுத்து
தற்போது நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார்
நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை
கையெழுத்திடுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழக மக்களை கடும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நெடுவாசலில் பதற்றம்
பொய்யான வாக்குறுதிகள் தந்து போராட்டங்களை கைவிட செய்துவிட்டது மத்திய
அரசு. ஆகையால் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கித்தான் மத்திய அரசுக்கு
பதிலடி கொடுத்தாக வேண்டும் என்பது நெடுவாசல் மக்களின் கருத்து.
No comments:
Post a Comment