நாகை மாவட்டம் திருவேங்கடம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின்
பேரில் தலைமை ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
நாகைப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் திருவேங்கடம்
மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மணிகண்டன் என்பவர் தலைமை ஆசிரியராக
பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர்
தலைமை ஆசிரியர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் அளித்துள்ளனர். அதன் பேரில் தலைமை
ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பனார்கோவில்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment