எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவை துவங்கிய ஒரு சில நாட்களிலேயே தொண்டர்கள் மத்தியில் தீபாவுக்கு ஆதரவு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள்
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தொண்டர்களின் வலியுறுத்தலால்
தனது அத்தையின் பிறந்தநாளான கடந்த 24ம் தேதி எம்.ஜி.ஆர்-அம்மா-தீபா பேரவையை
துவங்கினார்.
நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார். அந்த பட்டியல் திருப்திகரமாக
இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பட்டவர்களுக்கு மட்டும் பதவி
அளிக்கப்பட்டுள்ளதாக பிரச்சனை எழுந்தது.
தீபாவின் கணவர்
தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தார். தீபாவை
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து அரசியல் செய்யுமாறு ஒரு
சில தொண்டர்களும், தனியாக இருக்குமாறு ஒரு சிலரும் வலியுறுத்தி
வருகிறார்கள்.
இந்த காரணத்தால் தொண்டர்களிடையே கருத்து வேறுபாடு
ஏற்பட்டுள்ளது. தீபா வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்
தொண்டர்களை சந்திக்கிறார். இது தொண்டர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இதையடுத்து
தீபா வீட்டிற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
அமைப்பு துவங்கிய சில நாட்களிலேயே தீபாவுக்கு ஆதரவு குறைந்துள்ளது என்று
கூறப்படுகிறது.


No comments:
Post a Comment