எம்.பி. சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்து பின்னர் அதை திரும்பப் பெற்ற சகோதரிகளில் பானுமதியை காணவில்லை.
எம்.பி.
சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்தபோது அவரும், அவரது கணவர் லிங்கேஸ்வர
திலகனும், மகன் பிரதீப் ராஜாவும் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த கருப்பசாமியின்
மகள்களான பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம்
தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.
சசிகலா புஷ்பாவின் தாய் கௌரியும் தனது மகளுக்கு ஆதரவாக இருந்ததாக
சகோதரிகள் தெரிவித்தனர். இது குறித்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய
இன்ஸ்பெக்டர் அன்னத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த
வழக்கில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் சகோதரிகள்
இருவரும் தாங்கள் கொடுத்த புகாரை நேற்று முன்தினம் திடீர் என வாபஸ்
பெற்றனர்.
புகாரை வாபஸ் பெற்ற பிறகு பானுமதியை நேற்று மாலை 4.30 மணி
முதல் காணவில்லை. இதையடுத்து அவரது சகோதரி ஜான்சிராணி நேற்று திசையன்விளை
காவல் நிலையத்திற்கு சென்று பானுமதியை யாரோ கடத்திவிட்டதாக புகார்
கொடுத்துள்ளார்.


No comments:
Post a Comment