தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது, இதையடுத்து தமிழகத்தில் மக்கள் மழையை மிகவும்
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் எங்கும் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.பொதுமக்களும் , பெண்களும் காலிக் குடங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏரிகள், குளங்கள், ஆறுகள், அணைகள் என அனைத்தும் முற்றிலுமாக வறண்டு
காணப்படுகின்றன. உடனடியாக மழை பெய்தால் தான் குடிநீர் கிடைக்கும் என்ற
கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி,தர்மபுரி, கன்னியாகுமரி,மதுரை, சேலம்,
திருச்சி,வேலூர்,ஈரோடு,கரூர், சிவகங்கை,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்
இடியுடன் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மார்ச் மாதத்தில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மென் அறிவித்துள்ள நிலையில் , வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment