பிரதமர் நரேந்திர மோடி சத்குரு ஜக்கி வாசுதேவ், வெள்ளியங்கிரி மலையில்
அமைத்துள்ள ஆதியோகி சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து
கார்ப்பரேட் சாமியார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அவர்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகளையும் மீறி நேர்முக ஆதரவு அளித்து
வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துகொண்டுள்ளது.
ஶ்ரீ ஶ்ரீ
ரவிசங்கர், பாபா ராம்தேவ், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பெரும்
செல்வாக்குள்ள சாமியார்களுக்கு அரசு உதவிகளை அளித்து வருகிறது.
கலாச்சார விழா
கடந்த 2016ஆம்
ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் யமுனை நதிக்கரையில்
சில்லா கடார் என்னும் குடியிருப்புப் பகுதியில் சர்வதேச கலாச்சாரத்
திருவிழா நடைபெற்றது. அதில் சுமார் 6 ஏக்கர் நிலபரப்பில் மேடையும், அதை
அனைவரும் பார்க்கும் வகையில் அரை வட்ட வடிவில் கேலரி போன்ற பார்வையாளர்கள்
அமரும் இடமும் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள்
அந்த
மேடையை அடையவும், கேலரிகளை அமர்ந்து கொள்ளவும் 4 அடி உயரத்திற்கு மண்
கொட்டப்பட்டு, சமன் செய்யப்பட்டு, ராணுவ வீரர்களின் துணையோடு பாலம்
அமைக்கப்பட்டு, இரவோடு இரவாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதில் இந்திய
ராணுவம் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில்
அமளி ஏற்பட்டது. இந்த சர்வதேச கலாச்சார விழாவில் பல ஆயிரம் டன் குப்பை
உருவானதும் அதனால் சுற்றுசூழல் மாசடைந்ததும் இன்று வரை விவாதப் பொருளாகவே
இருக்கிறது
ஆதியோகி சிலை திறப்பும் பிரதமரும்
கோவை
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. இங்கு பல
ஏக்கர் காடுகளை அழித்து, 122 அடி உயரத்தில் ஆதியோகி சிலை
உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் ஆர்வலர்கள், சத்குரு யானைகலீன் பாதைகளை
அழித்து, அடைத்து ஈஷா யோக மையத்தைம் உருவாக்கியுள்ளார். இது காட்டு
பல்லுயிர் அழிவுக்கு காரணமாக உள்ளது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வரும்
நிலையில், பிரதமர் அங்கு நடக்கும் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வது
மிகுந்த சர்ச்சையை உருவாக்கியது. அதையெல்லாம் பொருட்படுத்தாமால் பிரதமர்
மோடி கலந்துகொள்வதன் பின்னணி என்ன என்பதே கேள்வியாக உள்ளது.
சாமியாரும் சோப்பு, ஷாம்பு வியாபாரமும்
பாஜக
மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு பாபா ராம்தேவ் 'பதஞ்சலி' நிறுவனம்
அன்றாட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் சாதனை படைக்கிறது. அதேபோல்,
வாழும் கலை மையமும் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா அறக்கட்டளை (எஸ்எஸ்ஏடி)
என்ற பெயரில் ஆயுர்வேதப் பொருள்களை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. அவர்களும் தற்போது இணையத்தில் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த வேகம் காட்டி வருகின்றனர். இவர்களின் செயல்பாடுகள், வியாபாரத்தை முன்னிலைப்படுத்துவதாகவே உள்ளதோ என்கிற அச்சத்தையும் அதற்கு மத்திய அரசு சமரசமின்றி உதவுகிறோதோ என்கிற எண்ணத்தையும் வலுப்பெறச் செய்கிறது.
No comments:
Post a Comment