ஜெயலலிதாவின் மரணம் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அவரது அண்ணன் மகன் தீபக் திடீரென வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தீபக் கூறியதாவது:
சசிகலாவை ஜெயலலிதாவிற்கு சமமாக மதிக்கிறேன். ஆனால் அவர்
குடும்பத்திலிருந்து வேறு யாரும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ வருவதை நானோ கட்சி
தொண்டர்களோ ஏற்க மாட்டார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வமோ யார் முதல்வர் பதவுக்கு
வந்தாலும் எனக்கு பிரச்சினையில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன்
அமைக்க வேண்டும்.
என்னால் தினகரன் மற்றும் வெங்கடேஷ் தலைமையை ஏற்க முடியாது. நானும்,
தீபாவும் தான் போயஸ் கார்டன் பங்களாவுக்கு உரிமையாளர்கள்.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் அபராதத் தொகை ரூ100 கோடியை நானே
கடன் வாங்கி கட்ட போகிறேன். அதன் பிறகு போயஸ் கார்டன் பங்களாவை உரிமை
கோருவோம்.
இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment