Latest News

  

ஆச்சரியப்பட வைக்கும் ஜெ.வின் அப்பல்லோ உரையாடல்கள்... ரீலை ரிலீஸ் செய்த திண்டுக்கல் சீனிவாசன்!


அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் ஜெயலலிதா இயல்பாக பேசினார்; 3 வகையான இனிப்பு வழங்கினார்; 5 நாட்கள் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்தோம்; சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் இருக்கின்றன என அடுக்கடுக்காக தகவல்களை வெளியிட்டுள்ளார் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதா மருத்துவமனைக்கு போனார்... அவரை கொலை பண்ணிட்டாங்க.. அவங்களை கொலை பண்ணியது சசிகலாதான்.. சொத்துக்காக கொலை பண்ணிட்டாங்க... என திமுக திட்டமிட்டு பரப்புனதை பலபேர் நம்புறாங்க.. மருத்துவமனைக்கு கொண்டு போனாங்க... ஆனால் உயிர் இல்லாமல் கொண்டு வந்துட்டாங்களேன்னு -பொதுமக்கள் நினைக்கிறாங்க...


பிள்ளைகள் மீது சத்தியம் சத்தியமாக... என் பிள்ளைகள் மீது ஆணையாக சொல்றேன்... நீங்க நம்பனும்... மருத்துவமனையில் எங்களைப் போன்றவர்களை எல்லாம் ஜெயலலிதா அழைத்து திட்டங்கள் குறித்து பேசினார்..

தேர்தல் வேலைக்கு உத்தரவு திருப்பரங்குன்றம், கரூர் (அரவக்குறிச்சி), தஞ்சாவூர் தேர்தலின் போது வேட்பாளர்களுக்காக, "என்னால கையெழுத்து போட முடியாது; ரேகை வெச்சு கொடுத்திருக்கிறேன். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து நீங்க போய் தேர்தல் வேலையை பாருங்கன்னு" எங்களை கூப்பிட்டு பேசினார் ஜெயலலிதா.



3 வகை ஸ்வீட் தந்த ஜெ "நல்லபடியா பார்த்துக்கிறங்கம்மான்னு" நாங்க சொன்னோம்.. ஜெயலலிதா "அருமையாக" பேசினார். தேர்தல் முடிவுகளை ஜெயலலிதா டிவியில் பார்த்துவிட்டு 3 வகையான இனிப்புகளை எங்களுக்கெல்லாம் கொடுத்து, "நீங்க அத்தனை பேரும் நான் அறிவித்த வேட்பாளர்களுக்காக உழைத்து வெற்றி பெற வைத்துள்ளீர்கள். நம்ம ஆட்சிக்கு கிடைத்த சாதனை; எம்ஜிஆருக்கு கிடைத்த சாதனை"ன்னு சொன்னாங்க..


ஜெ.வை சந்தித்து கொண்டிருந்தோம் எனக்கு கிடைச்ச சாதனைன்னு ஜெயலலிதா சொல்லவில்லை. 5 நாட்களுக்கு ஒருமுறை 10 நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவை சந்தித்து பேசிகிட்டு இருந்தோம்.



திடீர் மாரடைப்புதான் காரணம் திடீர்னு மாரடைப்பு வந்ததால ஜெயலலிதா இறந்துட்டாங்க... ஆஸ்பத்திரியில ஒரு வாரம் அல்லது 10 நாள் ஏதாவது ஒன்னுக்காக நாம் போயி இருந்தம்னா ஆண்கள் ஷேவ் பண்ணாம, டை அடிக்காம ஆளே அடையாளம் தெரியாம இருப்பாங்க


அழகானவங்களாக பார்த்திருக்கோம் கருப்பு மை கலைஞ்சு போச்சுன்னா எங்கப்பா மருதராஜை காணோம்... சீனிவாசனை காணோம்னு தேடத்தான் வேண்டும். ஜெயலலிதா 250 திரைப்படங்களில் கதாநாயகியாக நடிச்சவங்க.. இன்னைக்கும் அவங்க டான்ஸ்கள் பாட்டுகள் ஜெயா மூவிஸ்ல எல்லாத்துலயும் வருது...


உருவம் மாறிய ஜெ. அப்படி ஒரு அழகானவராக ஜெயலலிதாவை பார்த்தவர்கள் நாம். 10 நாட்கள், 15 நாட்கள் கழித்து பார்த்தபோது ஜெயலலிதாவின் உருவங்கள் மாறியது.. முகங்கள் கருப்பேறி, கைகளில் ஊசிபோட்ட நிலையில் இருந்தார் ஜெயலலிதா. பெட்டிலேயே இருந்ததால் எப்படி இருப்பாங்கன்னு சிந்திச்சு பாருங்க..


போட்டோ எடுக்கலாம்னு சொன்னோம் அதனால அவங்களை போட்டோ எடுத்து பேப்பர்ல போடலாம்னு அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் மற்றும் எங்களைப் போன்றவர்கள், "அம்மா நீங்க நல்லா இருக்கீங்கன்னு ஒருமுறை போட்டோ போட்டா போதும்னு" சொல்றோம்...


சீனிவாசன்னு ஜெ. சொன்னாங்க அப்ப ஜெயலலிதா சொல்றாங்க, "சீனிவாசன் திரைப்படங்களிலும் உடல்நலம் குன்றாத நிலையிலும் என்னை எப்படி பார்த்திருப்பீங்க... இப்ப என் நிலைமை என்ன?


நானே பார்க்கிறேன் நான் உடல்நிலை தேறி, குளிச்சு மொழுகி எல்லாம் டிரெஸ் பண்ணிட்டு நானே வெளியே வந்து எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்றேன்... அதுவரைக்கும் பொறுமையாக இருங்க... மக்கள் அம்மா இப்படியாகிட்டாங்களேன்னு நினைப்பாங்க... தேறிவந்ததும் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஜெயலலிதா சொன்னார்.


வீடியோ, போட்டோ எல்லாம் இருக்கிறது புகைப்படங்கள் எடுக்காதீர் என்றார் ஜெயலலிதா. ஆனால் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது அதுதான் உண்மை. அவங்க சிகிச்சை செய்தபோது வீடியோ, புகைப்படம் எடுத்து வெச்சிருக்காங்க... ரொம்ப வருதுன்னா எல்லாவற்றையும் போட்டு காண்பிக்க போறாங்க. இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.