ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு
புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் கால் மற்றும்
டேட்டாவுக்கான உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை ஏர்டெல் ரத்து செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இலவச இணையதள வசதி, வாய்ஸ் அழைப்பு
வசதி ஆகியவற்றை அறிமுக சேவையாக கடந்த செடம்பர் மாதம் முதல் வழங்கி
வருகிறது.
ந்த இலவச சேவைகள் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் என்று
தெரிவித்திருந்த நிலையில் அவற்றை வரும் மார்ச் வரை நீட்டித்துள்ளது.
இதுமட்டுமல்லாது, மார்ச் மாதத்துக்குப் பிறகு, லைஃப் டைம் சேவையாக வாய்ஸ்
அழைப்புகள் வழங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. இதனால் 5 மாதங்களில்
ஜியோவுக்கு 10 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
ஜியோ ஏற்படுத்திய பாதிப்பால் வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள்
புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா
முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங்
கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும்
வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல்
முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "நாங்கள் உள்நாட்டு
ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்" என
தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment