அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா எனது அம்மா போன்றவர் என்று ஜெயலலிதா
அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவின்போது இறுதி சடங்குகள் செய்தவர் அவரின் அண்ணன்
ஜெயக்குமாரின் மகன், தீபக். அவரோடு சேர்ந்து ஜெ. தோழி சசிகலாவும் ஈமக்
கிரியைகள் செய்தார்.
இந்த நிலையில், ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் தொலைபேசி வழியில்
கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு தீபக் பதிலளித்துள்ளார்.
உங்களுக்கு சசிகலா மீது முழு நம்பிக்கையுள்ளதா? எந்த வகையான உறவு முறை
உங்களுடையது? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபக், "அவர் எனது அம்மா போன்றவர்"
என்றார்.
சசிகலாவுடன் அடிக்கடி பேசிக்கொள்வது உண்டா என்ற கேள்விக்கு "அவர் எனது
தாய். பிறகு எதற்காக அவ்வப்போது பேசிக்கொள்ள வேண்டும்" என்றார் தீபக்.
சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்ற பேச்சு உள்ளதே என்ற கேள்விக்கு
"சசிகலாதான் முதல்வர். சசிகலாதான் முதல்வராகப்போகிறார். அவர் முதல்வராக
உறுதி செய்வோம்" என்றார்.
தீபக்கின் சகோதரியான தீபா, தன்னைத்தான் அதிமுகவின் அடுத்த வாரிசு என
கூறிவருகிறார். அவரை சசிகலாவுக்கு எதிராக களமிறக்க அதிமுகவின் ஒரு பிரிவு
முயன்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தீபக் இவ்வாறு கூறியுள்ளது தீபா
மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment