ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர சட்டம் தான் தீர்வு
எனக் கூறி நாளை நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அலங்காநல்லூர் மக்கள்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களுடன் மதுரை
ஆட்சியர் வீரராகவராவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
ஜல்லிக்கட்டு
நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர்
வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட
பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர சட்டமே தீர்வு
எனக் கூறி தமிழகம் முழுவதும் தொடரந்து போராட்டங்கள் நடைபெற்று
வருகின்றனர். நிரந்தர சட்டம் பிறப்பிக்கும் வரை போராட்டத்தில் இருந்து பின்
வாங்கப் போவதில்லை என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நிரந்தர
சட்டமே தீர்வு என அலங்காநல்லூர் மக்களும் கோஷமிட்டு வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த விடமாட்டோம் எனவும் அவர்கள் கூறிவருகின்றனர்.
இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அலங்காநல்லூருக்கு நேரில்
சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவசர
கதியில் போட்டி நடத்துவதற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். மேலும் ஆட்சியரின் பேச்சை ஏற்க மறுத்ததனர். இதனையடுத்து
பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் ஆட்சியர் தோல்வியுடன் திரும்பினார்.
இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment