அவசர சட்டத்தை நிரந்தரமாக்க முடியும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
அவசர
சட்டத்தையெல்லாம் நம்பி நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம், ஜல்லிக்கட்டை
நடத்த விடமாட்டோம் என்று அலங்காநல்லூர் உள்ளிட்ட அனைத்து ஊர் பொதுமக்களும்
ஒருசேர கூறிவிட்டனர்.
இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வமோ, அவசர சட்டத்தை சட்டசபையில்
வரும் 23ம் தேதி நிரந்தர சட்டமாக மாற்றும் வகையில் ஒரு வரைவை தாக்கல்
செய்வோம் என்று கூறியுள்ளார். இதை பெரும்பான்மை மக்கள் நம்பவில்லை. சட்டம்
குறித்த தெளிவு சாமானியர்களுக்கு இல்லை என்பதால், குழப்பம் நிலவி வருகிறது.
இதுகுறித்து கட்ஜு டிவிட்டரில் கூறியுள்ளது: அவசர சட்டம், தமிழக
சட்டசபையில் சட்டமாக உருமாறும்போது, அது நிரந்தர சட்டமாகிவிடும். அநேகமாக
விரைவிலேயே அதை அரசு செய்யப்போகிறது. எனவே பிரச்சினையில்லை என
கூறியுள்ளார்.
பன்னீர்செல்வமும் இதையேதான் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment