ராஜஸ்தானில் பதினைந்து வயதான 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி
கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், சுரூ மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர்
11ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி அவரது வீட்டில் தனியாக
இருக்கும்போது பள்ளி உரிமையாளர் அந்த மாணவியை கடத்தி சென்று தனது
உறவினருடன் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த மாணவியை கொலை செய்யும் முயற்சியில் அந்த கும்பல்
சரமாரியாக தாக்கியுள்ளது. இதில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான
மாணவியின் முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
மீட்கப்பட்ட அந்த மாணவி ஜெய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு
ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சிறுமியை கடத்தி பாலியல்
பலாத்காரம் செய்த பள்ளி உரிமையாளர் மற்றும் அவரது உறவினரை கைது செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment