திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் இருந்து
கீழே விழுந்தவரின் செல்போன் திருடப்பட்டதால் அவரை அடையாளம் காண உதவுமாறு
போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலில் இருந்து கடந்த
11-ந் தேதி காதில் ஹெட்போன் அணிந்து பேசிவந்த இளைஞர் ஒருவர் கீழே
விழுந்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில்
அந்த இளைஞர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும் முன்னதாக அவரது செல்போன்
திருட்டு போய்விட்டது. ஆகையால் அந்த நபர் யார்? என போலீசாரால் அடையாளம் காண
முடியவில்லை.
தற்போது அந்த இளைஞர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை போலீசார்
வெளியிட்டு அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கீழே உள்ள
படத்தில் இருக்கும் நபரை பற்றி உங்களுக்கு தகவல் தெரிந்தால் காவல் ஆய்வாளர்
சேகரின் 9498126999 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் போலீஸ் வேண்டுகோள்
விடுத்துள்ளது.
No comments:
Post a Comment