ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும்
தமிழர்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் இன்று அமைதி கூடல்
நடத்துகிறார்கள்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை
நீக்கப்படவில்லை. இது குறித்த வழக்கிலும் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு
வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட்
நகரில் வசிக்கும் தமிழர்கள் வியாழக்கிழமை அமைதி கூடல் நடத்தினர்.
மேலும் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் விக்டோரியா ஹவுஸ் முன்பு
இன்ற மாலை 6 மணிக்கு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி கூடல் நடத்த
உள்ளனர்.
இதே போன்று சிட்னி நகரில் வசிக்கும் தமிழர்கள் ஓபரா ஹவுஸ் முன்பு திரண்டு
அமைதி கூடல் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர். தமிழகத்தில்
போராடும் சக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை என்று கூறி அவர்கள் இன்று அமைதி கூடல் நடத்த
உள்ளனர்.
No comments:
Post a Comment