அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு
விடுத்துள்ளார். ஜனவரி 4 ஆம் தேதி முதல் ஜனவரி 9 ஆம் தேதி வரை மாவட்ட
வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலா அடுத்தது முதல்வர் பதவியை கைப்பற்ற
வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த நிர்வாகிகளும்
சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மணிகண்டன், தங்கமணி
ஆகியோருடன் சசிகலா இன்று மாலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கட்சிப்
பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள்
கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா
அறிவித்துள்ளார்.
மாவட்ட, நகர, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து செயலாளர்களுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது . சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை
அலுவலகத்தில் ஜனவரி 4-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற
உள்ளது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை
மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
ஜனவரி 6-ம் தேதி விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்,
சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதனைத்
தொடர்ந்து ஜனவரி 7 ம் தேதி நாகப்பட்டினம். புதுக்கோட்டை, திருவாரூர்,
மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு சசிககா தலைமையில் நடைபெறும் முதல்
நிர்வாகிகள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment