ஸ்மார்ட் ரேசன் கார்டு திட்டம் குறித்து எதிர்க் கட்சித் தலைவர்
மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அளவில் 2 கோடிக்கும் மேல் ரேசன் கார்டுகள் பயன்பாட்டில் இருந்து
வருகிறது. தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ள ரேசன் கார்டுகளின்
பயன்பாட்டுக் காலம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஜனவரி 1-ம்
தேதி முதல் ரேசன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கியது.
இதுகுறித்து, ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், அ.தி.மு.க.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து "தாள் ஒட்டும் பணியில்" மட்டுமே அதிக கவனம்
செலுத்தி, புதிய "ஸ்மார்ட் கார்டு" வழங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே
வருவது வெட்கக் கேடானதாகவும், வேதனை தருவதாகவும் இருக்கிறது என்று ஸ்டாலின்
குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக அமைச்சர் காமராஜ்,
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பொல்லாங்கு மனப்பான்மையுடன் பொய் அறிக்கை
வெளியிட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்
கூறிய காமராஜ், அனைத்து உணவுப் பொருட்களும் தடையின்றி கிடைக்கவே
தற்காலிகமாக உள்தாள் ஒட்டப்படுகிறது.
திமுக ஆட்சியில் புதிய குடும்ப அட்டை வழங்க எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை. 2010 மற்றும் 2011 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற திமுக
ஆட்சியிலும் உள்தாள் ஒட்டித்தான் ரேசன் கார்டு பயன்டுத்தப்பட்டது. அதன்
பின்னர் 2011, மே மாதம் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்
குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டோடு ஆதார் எண்ணை இணைத்துதான்
ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்க முடியும் பொல்லாங்கு மனப்பான்மையுடன் அறிக்கை
வெளியிடுவதை ஸ்டாலின் நிறுத்திகொள்ள வேண்டும். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment