முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர்
ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து
வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர
மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளார்.
நேற்றிரவு தொடங்கி விடிய விடிய அப்பல்லோ வளாகத்தில் தொண்டர்கள் ஜெயலலிதா
நலம் பெற பிரார்த்தனை செய்தனர். சாப்பிடாமல் தூங்காமல் அப்பல்லோ வளாகத்தில்
காத்துக்கிடந்தனர்.
•அதிகாலை 4 மணி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுகவினர் தொடர்
பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
•அதிகாலை 4.30 மணி - முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதய ரத்த நாள அடைப்பை
போக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது
•காலை 7 மணி - தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. -
அப்பல்லோ வளாகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது.
•காலை 7.30 மணியளவில் அதிமுக அமைச்சர்கள் அப்பல்லோவிற்கு விரைந்தனர்
•காலை 8 மணி அஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை
சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
•காலை 8.30 மணி மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர்
அப்பல்லோ விரைந்தனர்
•காலை 9 மணி மருத்துவர் கில்லானி தலைமையில் 4 பேர் கொண்ட குழு நரங்,
தல்வார், பிரிகன், ட்ரிஹா ஆகியோர் சென்னை விரைந்துள்ளனர் என மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்
•காலை 10 மணி : முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தமிழக ஆளுநரிடம்
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு விசாரித்தார். தலைமைச் செயலாளரிடம்
முதல்வர் உடல்நிலை குறித்து வெங்கய்யா நாயுடு கேட்டறிந்தார்.
•காலை 10.15 50க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சென்னை
அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.
•தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இயல்பாக உள்ளது, வதந்திகளை நம்ப வேண்டாம் -
காவல்துறை தலைவர் அறிவிப்பு
•காலை 10.30 மணி - தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது தமிழக பொறுப்பு
ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில்
தகவல்
•காலை 11 மணி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அப்பல்லோவில் தொடங்கியது.
முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு
•காலை 11.15 மணி முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்
•காலை 11.30 தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யத் தயார்
உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
•காலை 11.45 ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பிறகு முதல்வர் நலமுடன் இருப்பதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது அதிமுக செய்தி
தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி.
• பிற்பகல் 12 மணி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ்
தலைவர் திருநாவுக்கரசர் வருகை தந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை
குறித்து அறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு திருநாவுக்கரசர் வந்துள்ளார்.
•12.05 மணி முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய
அமைச்சர் வெங்கையா நாயுடு நேரில் சென்னை வர உள்ளதாக தகவல்
• பிற்பகல் 12.30 மணி - ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக
இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதாவின்
உடல்நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் செய்தி வெளியானது.
•பிற்பகல் 1 மணி - முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக
உள்ளது என்றும் போராடி வருகிறோம் என்று பதிவிட்டு அதை உடனே நீக்கினார்
சங்கீதா ரெட்டி•பிற்பகல் 2 மணி - எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு டெல்லியில்
இருந்து சென்னை வந்ததடைந்தாக தகவல் வெளியானது.
•பிற்பகல் 3 மணி - முதல்வர் ஜெயலலிதாவிற்கு சர்வதேச தரத்திலான சிகிச்சைகள்
அளித்து விட்டோம். என்னென்ன செய்ய வேண்டுமோ அந்த சிகிச்சைகள் அளித்து
விட்டோம் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டார் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்
பீலே அறிக்கை வெளியிட்டர்.
•மாலை 4 மணி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருவதாக தகவல்
வெளியானது.
•மாலை 5.45 மணிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னை வர உள்ளதாக
கூறப்பட்டது
•மாலை 6 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
•ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் அறிக்கை இன்னும் சில
மணிநேரங்களில் வெளியிடப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
•மாலை 5.45 மணிக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னை வந்தார். 6
மணிக்கு அப்பல்லோ வந்து ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்தார்.
•மாலை 6.30 மணிக்கு வெங்கய்யா நாயுடு டெல்லி திரும்பினார்.
•இரவு 7 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி
பங்கேற்கவில்லை.
•ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் அறிக்கை இன்னும் சில
மணிநேரங்களில் வெளியிடப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள்
No comments:
Post a Comment