தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இரவு
உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு விரைவில் சட்டசபை கூட்டத்தை கூட்டி
இரங்கல் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி,
திரைப்பட நடிகரும் பத்திரிகையாளருமான சோ. ராமசாமி, கியூபாவின் முன்னாள்
அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கபட உள்ளது. இதற்கான
அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று தலைமை செயலக மூத்த அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
எனவே, அதற்கு முன்பாக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு
ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட இருப்பதாகக்
கூறப்படுகிறது. மறைந்த கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் அமைச்சர்
கோ.சி.மணி உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும் என தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இரங்கல் தெரிவிக்கப்பட்ட உடன் சபை ஒத்தி வைக்கப்படுமா? அல்லது காவேரி
நதிநீர் பங்கீடு பிரிச்சினையில் சிறப்பு தீர்மானம் எதுவும்
நிறைவேற்றப்படுமா என்பது சட்டசபை கூடிய பின்னர் தெரியவரும்.
No comments:
Post a Comment