கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்பது 50 நாட்களில் நிறைவேறாது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
கருப்பு
பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500,1,000 ரூபாய்
நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8 ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி
அறிவித்தார். இதையடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு
அறிமுகம் செய்தது.
இதனிடையே மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் செபாசிட்
செய்து வருகின்றனர். இருப்பினும் பணத்தட்டுப்பாட்டினால் மக்கள் தொடர்ந்து
அவதிப்பட்டு வருகிறார்கள். திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு
நிலைமை 50 நாட்களுக்குள் சீரடையும் என்றார். ஆனால், இன்னும் நிலைமை
சீராகவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை என்பது 50 நாட்களில் நிறைவேறாது
என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில்,
பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு எதிர்புகள் அதிகம் உள்ளதால் வெகு விரைவில்
நிலமை சீராகும். கருப்புப்பண ஒழிப்புக்குப் பிறகு இந்திய பொருளாதாரம்
சிறப்பான நிலையை அடையும் என்றார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெங்கையா நாயுடு, வருமான
வரித்துறை சோதனையில் எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லை. மத்திய அரசுக்கும்
இந்த சோதனைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கூறினார். மேலும், வருமான
வரித்துறை சோதனை சரியான முறையில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. வருமான
வரித்துறை சோதனை தொடர்பாக ராகுல் காந்தி ஆதாயம் தேடுவதாகவும், ராமமோகன
ராவ் தேவையற்ற பிரச்சனைகளை எழுப்புவதாகவும் வெங்கையா நாயுடு
குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment