கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ500, ரூ 1000 நோட்டுகள் வாபஸ்
பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அத்துடன் வங்கி மற்றும்
அஞ்சலகங்களில் நாளை பணப் பரிவர்த்தனை எதுவும் நடைபெறாது; நாளை வங்கிகள்
மூடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக ரூ500, ரூ1,000 நோட்டுகள் இன்று
நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிரடியாக
அறிவித்தார். புதியதாக ரூ500 மற்றும் ரூ2,000 நோட்டு அறிமுகப்படுத்தப்படும்
என்றும் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
மேலும் நாளையும் நாளை மறுநாளும் ஏடிஎம்கள் செயல்படாது என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை வங்கிகள் நாடு முழுவதும் மூடப்படும்
என்றும் அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் அனைத்து பணபரிவர்த்தனைகளும் நாளை
நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment