அதிபர் தேர்தலில் ட்டிரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவின் வெற்றி என
அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 8ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆளும் ஜனநாயகக்
கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனும்
(69) குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் (70) போட்டியிட்டனர்.
இதில் டெனால்ட் ட்ரம்பு வெற்றி பெற்றுள்ளார். நாடு முழுவதும் அவரது
ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக தலைவர்கள்
ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்புக்கு, தற்போதைய
அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் வெள்ளை
மாளிகைக்கு வர ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் அதிபர்
ஒபாமாவின் அழைப்பை ஏற்று, வெள்ளை மாளிகை சென்ற ட்ரம்ப் அதிபர் ஒபாமாவை
சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின் ஒபாமா கூறுகையில், ட்ரம்ப் வெற்றி பெற்றது
அமெரிக்காவின் வெற்றி. ஆட்சி நிர்வாகத்தை சுமூகமான முறையில் ஒப்படைப்பதே
எனது தலையாய கடமை என்று தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே
அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தது எனக்கு கிடைத்த கவுரம் என டொனால்டு
ட்ரம்ப் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment