அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானில்
பிறந்தவர் என்றும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் என்றும்
அந்நாட்டு டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. உலகமே ஆர்வத்துடன்
எதிர்பார்த்த இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் வெற்றி
பெற்றார்.
இந்நிலையில் அவரை பற்றிய புதிய கதையை பாகிஸ்தானின் நியோ நியூஸ் சேனல்
ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ட்ரம்ப் பாகிஸ்தானின் வஸ்ரிஸ்தான்
பகுதியில் 1954ஆம் ஆண்டு பிறந்தார் என்றும் அவரது உண்மையான பெயர் தாவூத்
இப்ராஹிம் கான் என்றும் தெரிவித்துள்ளது.
1955ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ட்ரம்ப்பின் குடும்பத்தினரால்
தத்தெடுக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளது. பின்னர் அந்த குடும்பம்
அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் அந்த டிவி சேனல் தெரிவித்துள்ளது.
மேலும் ட்ரம்பின் குழந்தை பருவ புகைப்படத்தையும் அந்த செய்தி சேனல்
வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை
தெரிவித்து சர்ச்சைக்குள்ளானவர். இந்நிலையில் பிறப்பில் அவர் ஒரு
இஸ்லாமியர் என செய்தி வெளியிட்டு பாகிஸ்தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.


No comments:
Post a Comment